Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
    திருவத்திபுரம் நகராட்சி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செய்யாறு ரிவர் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.எழிலன் தலைமை வகித்தார். 
    பேராசிரியர்கள் ஏ. மாரிமுத்து, மு.குமார், ச.துரைராஜ், சி.டி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார். 
    சிறப்பு விருந்தினராக திருவத்திபுரம் (செய்யாறு)  நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லிபாபு கலந்து கொண்டு பேசியதாவது: 
    தேசிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 255 மாவட்டங்களை நிலத்தடி நீர் குறித்த ஆய்வுக்கு உள்படுத்தியபோது, திருவண்ணாமலை மாவட்டம் நிலத்தடி நீர் அபாய கட்டத்தை தொடும் அளவுக்கு சென்றுள்ளது தெரிய வருகிறது.  சென்னை மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. 
    நம் முன்னோர்கள் மேற்கொண்ட நீர்நிலைகள் பராமரிப்புப் பணிகளை நாம் சரிவர கடைப்பிடிக்கவில்லை. 
    அதனால்தான் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. 
    மேலும், மழைக் காலங்களில் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் உள்ளிட்ட  பகுதிகளில் நீர்த்தேக்கம்  ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானத்தை அமைக்கவேண்டும் என்றார்.
    பின்னர், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் தேவி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தினர் செய்திருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai