Enable Javscript for better performance
அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
      முகாமில் தெள்ளாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    முகாமுக்கு, தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் தலைமை வகித்தார். தெள்ளாறு காவல் ஆய்வாளர் 
    சசிகுமார் முகாமை தொடக்கிவைத்தார். மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மொத்தம் 1900 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
      தெள்ளாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பாண்டியன், பொறியாளர்கள் செல்வராஜ், மணிகண்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் கோதண்டராமன், பாஸ்கரன் உள்ளிட்டோர் 
    பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai