Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் மிருந்து மீட்கக் கோரி வட்டாட்சியர் கே.அமுலிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
    திருவண்ணாமலை வட்டம், காட்டாம்பூண்டி வள்ளிமலையில் சர்வே எண் 36/84ல் அந்தக் கிராம பொது உபயோகத்துக்கான இடம் உள்ளது. அந்த இடத்தின் ஒரு பகுதியில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. மீதி இருக்கும் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த  இருவர் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
    இதனால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் நியாய விலைக் கடைக்கு கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.  இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்தக் கிராம மக்கள் சுமார் 50 பேர் புதன்கிழமை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
    அங்கு வட்டாட்சியர் கே.அமுலுவை சந்தித்து மனுவை அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தை அளந்து சரி பார்த்து பொது இடத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai