Enable Javscript for better performance
ஆடிக் கிருத்திகை திருவிழா: ஆரணியிliருந்து திருத்தணிக்கு 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆடிக் கிருத்திகை திருவிழா: ஆரணியிலிருந்து திருத்தணிக்கு 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஆரணியிலிருந்து திருத்தணிக்கு 40 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்து புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
    ஆடிக் கிருத்திகை தினத்தில் முருக பத்தர்கள் திருத்தணி முருகனுக்கு வேண்டுதல் நிறைவேற்ற ஏராளமானோர் காவடி எடுத்துச்செல்வர். 
    இதையொட்டி, இந்து சமய அறநிலயத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில், ஆரணியில் இருந்து 40 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஆரணி கிளை பணிமனை மேலாளர் வெங்கடேசன் தெரிவித்தார். 
    மேலும், ஆரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்; கட்டணம் ரூ.70 ஆகும். பேருந்துகள் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நான்கு நாள்களும் இரவு பகல் என 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
    சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை பணிமனை மேலாளர் வெங்கடேசன், அண்ணா தொழில்சங்க நிர்வாகி உதயசங்கர் ஆகியோர் புதன்கிழமை தொடக்கிவைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai