Enable Javscript for better performance
ஆட்டோ, பைக் மோதல்:  ஒருவர் பலி; 14 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே ஆட்டோ மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உள்பட 14  பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
    செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் இருந்து பெண் தொழிலாளர்கள் 13 பேர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஷேர் ஆட்டோவில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். 
    காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தூசி கிராமம் பல்லாவரம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த பைக் மோதியதாகத் தெரிகிறது. பைக் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
    இதில் பைக்கில் வந்த சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சங்கர் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     ஆட்டோ கவிழ்ந்து அதில் சிக்கி காயமடைந்த பெண் தொழிலாளர்களான குமுதா (35), சாந்தி (37), லட்சுமி (28), சுகந்தி (38), ஷாலினி (28), ராதிகா (28), பவித்ரா (23), ஆனந்தி (36), ஆட்டோ ஓட்டுநர் உசேன் (27) உள்ளிட்ட 14 பேர் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    இந்த விபத்து குறித்து உயிரிழந்த சங்கரின் மனைவி உமா தூசி போலீஸில் புகார் செய்தார். போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ரனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai