Enable Javscript for better performance
ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தினர் கவனத்துக்கு...!- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தினர் கவனத்துக்கு...!

    By DIN  |   Published on : 25th July 2019 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் விண்ணப்பித்து ஈமச்சடங்கு நிதியுதவியைப் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக இறந்தவரின் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    2019-2020 ஆம் நிதியாண்டுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இந்த உதவித் தொகையை வழங்க ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் தமிழக அரசால் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பில் எவரேனும் இறந்தால் அந்தக் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த மானியத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai