Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற டி.ஜி.பி.க்கு  பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலத்தில் தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநராக (டிஜிபி) இருந்து ஓய்வுபெற்ற தே.க.ராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்தில் பிறந்து, படித்தவர் டி.கே.ராஜேந்திரன். தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற அவருக்கு வேட்டவலம் நகர பொதுமக்கள், இயற்கை விவசாயிகள் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
    விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். வேட்டவலம் ஜமீன் மகேந்திர பண்டாரியார் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். டிஜிபியின் ஆசிரியர்கள் தியாகராஜன், பக்தவச்சலம், குமார் ஆகியோர் அவரது இளமைக்காலம் குறித்துப் பேசினர்.
    வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜமீன் வளாகம் ஆகிய இடங்களில் பசுமை வேட்டவலம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகளை ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி,  காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நட்ட
    னர். இதையடுத்து, ஓய்வு பெற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார். விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தரணிவாசுலு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai