Enable Javscript for better performance
செங்கத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துகளின் நிறுத்தத்தை முறைப்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துகளின் நிறுத்தத்தை முறைப்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் நகரில் பள்ளி, கல்லூரி பேருந்துகளின் நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர்.
     செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை ஒரே சாலைதான்; மாற்றுச் சாலை கிடையாது. சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த நிலையில், காலை, மாலை இரு வேளையும் பள்ளி, கல்லூரி பேருந்துகளை துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை வரை 10 இடங்களில் நிறுத்தி மாணவர்களை இறக்கி, ஏற்றிச் செல்கின்றனர். 
    இதனால் பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை வரை பேருந்துகள் நிறுத்தும் இடத்தை அவர்களிடம் அறிவிக்கவேண்டும். 
    அந்த இடத்தில் மட்டும் மாணவர்களை ஏற்றி, இறக்கிவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறைவாக இருக்கும் என்கின்றனர் நகர மக்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai