Enable Javscript for better performance
திருவண்ணாமலை உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் சில உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் திருவண்ணாமலை நகர அலுவலர் கலைஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பேருந்து நிலையத்திலுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
    அப்போது, அவர்கள்  உணவு  பரிமாறுமிடம்,  சமையலறை உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டனர். ஒரு உணவகத்தின் சமையலறை மிகவும் அசுத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உணவக  உரிமையாளருக்கு உடனடியாக புனரமைக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினார். மேலும் ஒருவார காலத்திற்குள் புனரமைப்பு பணி செய்யவில்லை என்றால் உணவகத்தை மூடி சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர். 
    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் கூறுகையில்,  பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும். இதுபோன்றுதொடர்ந்து ஆய்வு செய்யப்படும். ஆய்வில் தவறுகள் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடுமையான நடவடிக்கை 
    எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai