Enable Javscript for better performance
தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்கப் விழா அண்மையில் நடைபெற்றது.
    விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வ.மணி தலைமை வகித்தார். வந்தவாசி செஞ்சிலுவைச் சங்கச் செயலர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 
    தொல்லியல் துறை காப்பாட்சியர் அ.ரஷீத்கான் மன்றத்தை தொடக்கிவைத்துப் பேசினார். தொல்லியல் துறை சார்ந்த பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த தகவல்கள் குறித்து அவர் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.   விழாவில் பள்ளி ஆசிரியர்கள் கு.பிரியதர்ஷினி, டி.லட்சுமிநாராயணன் மற்றும் சீ.கேசவராஜ், கு.சதானந்தன், ம.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai