Enable Javscript for better performance
நீர் மேலாண்மை இயக்க செயல்பாடுகள்:திட்ட இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நீர் மேலாண்மை இயக்க செயல்பாடுகள்: திட்ட இயக்குநர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்க செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா ஆய்வு மேற்கொண்டார்.
     அப்போது அவர் அனைத்துக் கிராமங்களிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    இதில் ஆணையர் தி.அண்ணாமலை, தனி அலுவலர் ப.பாண்டியன், அலுவலக மேலாளர் வி.அண்ணாமலை, உதவிப் பொறியாளர்கள் அருணா, பழனி இந்திராகாந்தி பழனிச்சாமி பணி பார்வையாளர்கள் சந்தோஷ்குமார் ஆறுமுகம் தங்கவேல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆய்வின்போது திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா,
    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 65 கிராம ஊராட்சிகளில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மாசுபட்டுள்ளது. அரசு மூலம் கடல், பூமி, மேகம், காற்று என பல்வேறு தொழில்நுட்பங்களில், வழிவகைகளில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது, இருந்தாலும் தண்ணீருக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. 
    விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தண்ணீர் சேகரித்து வேளாண்மை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தண்ணீரை சேகரிக்கும், பாதுகாக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். நீர் நிலைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai