Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களின் விவரம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி தகவல் மேலாண்மை முறைமை  (இஎம்ஐஎஸ்) ஆய்வு செய்யப்பட்டது.
    துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்  உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  23 ஆயிரத்து 666 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தனித் தனியாக இஎம்ஐஎஸ் எண்ணை  பதிந்து ஸ்மார்ட் கார்டு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்கள் சார்ந்த விவரம், ஆசிரியர்கள் சார்ந்த விவரம், பள்ளி சார்ந்த விவரங்கள் பதியப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் சரியாக அந்ததந்த மாணவர்களிடம்  உள்ளனவா என ஆசிரியர் பயிற்றுநர் கோவிந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 
    வட்டாரக் கல்வி மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai