Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. 
    செய்யாறு ஒன்றியம் சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம், முன்னிலை வகித்தார்.
    பேரணியின் போது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பற்றியும், தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகிய தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    பேரணியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ரேவதி, நவீன்குமார், வைரபிரியா, பார்த்தீபன், நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.சீனுவாசன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் புவனேஷ்வரி, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai