Enable Javscript for better performance
வேட்டவலம் திரெளபதியம்மன் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் திரெளபதியம்மன் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் முதலியார்குளம் மேட்டில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இந்தக் கோயிலில் அக்னி வசந்த பிரம்மோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி காப்பு அணிவித்து தொடங்கியது. தினமும் மாலை 7 மணி முதல் 10 வரை ஐந்தாம் வேதமாகிய மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 22-ஆம் தேதி கொடியேற்ற நாளன்று மாலை 6 மணிக்கு வேட்டவலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துளுவ வேளாளர் சமுதாயத்தினர் ஒன்றிணைந்து பேருந்து நிலையத்தில் இருந்து மாடவீதி வழியாக வரிசை தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோயிலை அடைந்தவுடன் சிறப்பாக அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
    பின்னர், பொதுமக்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் திரெளபதியம்மன் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் மாடவீதியுலா நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai