முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
செங்கத்தில் கால்வாய்களை அளவீடு செய்துதர கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 07:21 AM | Last Updated : 30th July 2019 07:21 AM | அ+அ அ- |

செங்கத்தில் உள்ள கால்வாய்களை அளவீடு செய்துதர மாவட்ட ஆட்சியருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் உள்ள குளத்தில் காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட தலைவர் ஜி.குமார் தலைமையில், கட்சி நிர்வாகிகள் கடந்த ஒரு வாரமாக குளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்.
தற்போது குளம் தூர்வாரி குளக்கரைகள் அமைக்கப்பட்ட நிலையில் குளம் உள்ளது. மேலும் மழைக் காலத்தில் குளத்துக்கு வரும் ஏரி கால்வாய்கள், மழை தண்ணீர் செல்லும் கால்வாய்கள், குளம் நிரம்பி குளத்தில் இருந்து வேறுபகுதிக்குச் செல்லும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு கால்வாய்கள் எங்கு இருக்கிறது என்பது குறித்து தெரியாத நிலை உள்ளது.
இதனால் துக்காப்பேட்டை குளத்துக்கு வரும் கால்வாய்களை வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவற்றில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இந்தப் பணிகளை அரசு அதிகாரிகள் செய்துதர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டவுடன் கால்வாய்களை தூர்வாரி சரிசெய்து பின்னர் குளக்கரை மீது பூங்கா அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக மாவட்டத் தலைவர் குமார் தெரிவித்தார்.