முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
செத்தவரை ஸ்ரீபூவாத்தம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 30th July 2019 07:22 AM | Last Updated : 30th July 2019 07:22 AM | அ+அ அ- |

வேட்டவலத்தை அடுத்த செத்தவரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவாத்தம்மன் கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்போது, செத்தவரை பூவாத்தம்மன் கோயிலில் காப்பு கட்டி திருவிழா நடத்தினால் மழை பொழியும் என்பது நம்பிக்கை.
அதன்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பூவாத்தம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, ஜூலை 21-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சுவாமி தரிசனம் செய்ய வந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருள் வந்து ஆடினர்.
தொடர்ந்து, வெள்ளைக் குதிரையின் தலை மீது ஸ்ரீபூவாத்தம்மனை வைத்து வேட்டவலம் நகரை நோக்கி பக்தர்கள் வந்தடைந்தனர்.
அப்போது, லேசான மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணிக்கு வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஏற்பாடுகளை வேட்டவலம் ஜமீன் மகேந்திர பந்தாரியார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.