முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு
By DIN | Published On : 30th July 2019 07:23 AM | Last Updated : 30th July 2019 07:23 AM | அ+அ அ- |

துரிஞ்சாபுரம் அருகே சாணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பச்சையம்மாபுரம், சாணானந்தல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் திங்கள்கிழமை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவை சாப்பிட்டார்.
பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமா, சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி, சமையலர் பத்மா, உதவியாளர் பிரியா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.