முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பொதுமக்களுடன் இணைந்து குளத்தை தூர்வாரிய அதிகாரி
By DIN | Published On : 30th July 2019 07:21 AM | Last Updated : 30th July 2019 07:21 AM | அ+அ அ- |

செங்கம் அருகே பொதுமக்களுடன் இணைந்து உதவித் திட்ட அலுவலர் அர்விந்த், குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
செங்கம் ஒன்றியம், மேல்செங்கம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட தண்டம்பட்டு பகுதியில் பழைமை வாய்ந்த குளம் உள்ளது.
அந்தக் குளத்தை ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்வார முடிவு செய்யப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவித் திட்ட அலுவலர் அர்விந்த் தலைமையில், ஆணையர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவஆனந்த் உள்பட ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள், தண்டம்பட்டு கிராம பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட அதிகாரியே குளத்தில் இறங்கி வேலை செய்ததைப் பார்த்த கிராம மக்கள், விவசாயிகள் உற்சாகமடைந்து பணியில்
மும்முரமாக ஈடுபட்டனர்.
அப்போது, உதவித் திட்ட அலுவலர் கூறியதாவது: இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து கிராம மக்களுக்கும் வரவேண்டும். அதை ஊராட்சிச் செயலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்தான் செய்யவேண்டும். பொதுமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி வைத்துக்கொண்டால், மழைக் காலத்தில்
தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படும் என்றார்.