இளம் மாணவ விஞ்ஞானிகள் திட்டப் பயிற்சி நிறைவு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வந்த இளம் மாணவ, விஞ்ஞானிகள்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வந்த இளம் மாணவ, விஞ்ஞானிகள் திட்டப் பயிற்சி முகாமின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில், இளம் மாணவ விஞ்ஞானிகள் திட்டப் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
15 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டதுடன், தொழில்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேரடி செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
முகாமின் நிறைவு விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் கணிதவியல் துறைத் தலைவர் பி.முருகன் வரவேற்றார்.
முகாமில், அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பாக நடத்தப்பட்ட தேர்வு, அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இளம் மாணவ விஞ்ஞானிகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைப் பேராசிரியருமான டி.மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com