மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா
By DIN | Published On : 01st June 2019 07:33 AM | Last Updated : 01st June 2019 07:33 AM | அ+அ அ- |

போளூர் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மே மாதம் கடைசி வாரத்தில் கூழ்வார்த்தல் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல, நிகழாண்டு கடந்த செவ்வாய்க்கிழமை கூழ்வார்த்தல் விழா தொடங்கியது. இதையொட்டி, பக்தர்கள் காப்புகட்டி விரதமிருந்து பூங்கரகம் எடுத்துச் சென்று வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மலர் அலங்காரம் நடைபெற்றன. பிற்பகல் ஒரு மணிக்கு கூழ்வார்க்கப்பட்டு மாரியம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர், மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை
வழிபட்டனர்.