மாவட்ட மைய நூலகத்தில் கோடை முகாம் நிறைவு

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில்  நடைபெற்று வந்த கோடை முகாமின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில்  நடைபெற்று வந்த கோடை முகாமின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில், கடந்த 4-ஆம் தேதி கோடை சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. இதில், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி, அடிப்படைத் தமிழ், ஓவியம் வரைதல், இசை, பாட்டு, நடனம், சதுரங்கம், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டன. முகாமில், 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களிடையே பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற, கலந்துகொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் முகாமும், கோடை முகாமின் நிறைவு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு ரோட்டரி சங்க நிர்வாகி கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, அமிழ்தம் மின் இதழ் பொறுப்பாசிரியர் விஜயபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன் வரவேற்றார். திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றுகள், மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார்.
விழாவில், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் எம்.ராஜசேகர், மூன்சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கபிலன், சித்தார்த்தன், பாலகிருபாகரன், அருள்மணி, தியோபிளஸ் ஆனந்தகுமார், நல் நூலகர்கள் த.கிருஷ்ணன், த.வெங்கடேசன், சாயிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com