Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

    By DIN  |   Published on : 04th June 2019 09:22 AM  |   அ+அ அ-   |    |  

    முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மேள தாளத்துடன் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் - ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.உமாமகேஷ்வரி வரவேற்றார்.
     பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் கே.எஸ்.செல்வராஜ், துணைத் தலைவர்கள் கே.வெங்கடேசன், வி.பழனிகுமார், பொருளாளர்கள் ஜனார்த்தனம், டி.விநாயகம், முன்னாள் மாணவிகள் சங்கச் தலைவிகள் மெய்.பூங்கோதை, மெர்சிரோஸ், கே.ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நிகழ்ச்சியின் போது, பள்ளியில் புதிதாகச் சேர்ந்த 6 மற்றும் 11 - ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, மேள தாளத்துடன் மலர் தூவி, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வரவேற்பு அளித்தனர். அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai