Enable Javscript for better performance
செய்யாறில் ஜூன் 7-இல் ஜமாபந்தி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் ஜூன் 7-இல் ஜமாபந்தி தொடக்கம்

    By DIN  |   Published on : 04th June 2019 09:19 AM  |   அ+அ அ-   |    |  

    செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாய கணக்குத் தணிக்கை வரும் ஜூன் 7 -ஆம் தொடங்கி 18 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
     இதுகுறித்து செய்யாறு வட்டாட்சியர் ஆ.மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     செய்யாறு வட்டம் 1428 - ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாய கணக்கு தணிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஜமாபந்தியின் போது நிலவரி கணக்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
     சம்பந்தப்பட்ட பிர்காவைச் சேர்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள் கவனிக்கப்படும்.
     மனு கொடுக்க விரும்பும் விவசாயிகள் மனுவின் ஒரு நகலை, ஜமாபந்திக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தீர்வாய அலுவலரான மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கலாம்.

    kattana sevai