சுடச்சுட

  

   

   செங்கம் பகுதி பள்ளியில் தீத்தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  செங்கத்தை அடுத்த மில்லத் நகரில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், செங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 
  தீ விபத்தை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளித்தனர்.
   நிகழ்ச்சியில்,  தீயணைப்புப்படை வீரர்கள் மாணவர்கள் முன்னிலையில் கூரை வீடுகளில் தீப்பிடித்தால் அதை அணைக்கும் முறைகள், தீயில் சிக்கியவர்களை மீட்பது, மாடிவீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால், மாடியில் இருப்பவர்களை கீழே இறக்குவது, கிணறு, குட்டைகளில் விழுந்தவர்களை மேலே தூக்கி விடும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். 
  அதேபோல, தீ விபத்தை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளித் தலைவர், பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தீயணைப்புப் படையினர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai