சிறப்பு சொற்பொழிவு
By DIN | Published On : 14th June 2019 07:25 AM | Last Updated : 14th June 2019 07:25 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நல்லோர் வட்டம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு தெள்ளாறு திருஞானசம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் டி.எ.அகஸ்தியப்பன் தலைமை வகித்தார். சேனல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஈ.ஏழுமலை முன்னிலை வகித்தார்.
ராமாயணத்தில் சகோதர பாசம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் சிறப்புரை ஆற்றினார். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற அந்தப் பகுதி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். புலவர் ந.பானு நன்றி தெரிவித்தார்.