சுடச்சுட

    

    தினமணி சார்பில் பொதுமக்களுக்கு  குடிநீர், குளிர்பானங்கள் விநியோகம்

    By DIN  |   Published on : 14th June 2019 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஆரணி இ.எஸ்.பி. எலக்ட்ரிகல்ஸ், ஹோம் அப்ளையன்சஸ் விற்பனையகம் சார்பில், கோடைவெயிலின் தாகம் தணிக்க பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
     ஆரணி அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தாகம் தணிப்போம் நிகழ்ச்சிக்கு இ.எஸ்.பி.  எலக்ட்ரிகல்ஸ், ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் ஸ்டீல் குழுமத் தலைவர் இ.சலீம்பேக் தலைமை வகித்தார். 
    நிர்வாகிகள் எஸ்.ஆரிப்பேக், எஸ்.ஆஸிப்பேக் ஆகியோர் பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள்,  குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
    மேலும், தினமணி ஊழியர்களும் கலந்துகொண்டு குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்தனர். இதைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai