சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  வந்தவாசி தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தீப்பற்றினால் எப்படி காத்துக் கொள்வது, தீப்பிடித்த கட்டடங்களிலிருந்து எப்படி வெளியேறுவது, சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றினால் எப்படி அணைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
  வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இந்த செயல்விளக்கத்தை செய்து காண்பித்தனர். கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai