சுடச்சுட

  

  பிரதமரின் திருந்திய கிசான் சம்மான் நிதித் திட்டம்: பெரு விவசாயக் குடும்பங்களுக்கு அழைப்பு

  By DIN  |   Published on : 14th June 2019 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமரின் திருந்திய கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயனடைய, திருவண்ணாமலை மாவட்ட நடுத்தர மற்றும்  பெருவிவசாய குடும்பங்களும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம்  பதிவு செய்யலாம். 
   பாரதப் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் திருவண்ணாமலை  மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 லட்சத்து 26 ஆயிரத்து 955 சிறு, குறு விவசாயக் குடும்பங்களில் இதுவரை 1 லட்சத்து 95ஆயிரத்து 164 விவசாயக் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு சரியாக ஆவணங்கள் சமர்ப்பித்த 1 லட்சத்து 54ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணைத் தொகையாக இதுவரை மொத்தம் 61 கோடியே 66 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.        தற்போது, பிரதமர் அறிவித்துள்ள திருந்திய கிசான் சம்மான் நிதித் திட்டம், நடுத்தர மற்றும் பெரு விவசாயக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
  அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுத்தர மற்றும் பெரு விவசாயக் குடும்பங்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு விவசாயிகள் தங்களின் நிலம் தொடர்பான ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக நகல், செல்லிடப்பேசி எண், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை தங்களது பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். 
  ஏற்கெனவே அறிவித்துள்ளபடி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ரூ.10ஆயிரத்துக்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், வருமான வரி செலுத்துவோர், வழக்குரைஞர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்ய இயலாது.  
  மேலும், ஏற்கெனவே இத்திட்டத்தில் பதிவு செய்யாத சிறு, குறு விவசாயிகளும் தற்போது பதிவு செய்து கொள்ளலாம்.  ஏற்கெனவே பதிவு செய்து காலமாகிவிட்ட சிறு, குறு விவசாயிகளின் வாரிசுதாரர்கள், உரிய பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.  எனவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai