அருணாசலேஸ்வரர் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
By DIN | Published On : 18th June 2019 09:49 AM | Last Updated : 18th June 2019 09:49 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு திங்கள்கிழமை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவரை கோயில் சிவாச்சாரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, நவகிரக சன்னதிகளில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தைச் சுற்றி வலம் வந்த அவர், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.