கல்பூண்டியில் ரூ.5.25 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

ஆரணியை அடுத்த கல்பூண்டி-லாடப்பாடி ஆற்றின் குறுக்கே ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

ஆரணியை அடுத்த கல்பூண்டி-லாடப்பாடி ஆற்றின் குறுக்கே ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 ஆரணி அருகே கல்பூண்டி-லாடப்பாடி கமண்டல நாகநதியின் குறுக்கே ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்த உயர்மட்ட மேம்பாலம் நபார்டு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2018-2019 ஆண்டின் கீழ், ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் 116 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இப்பாலம் அமைப்பதால் கல்பூண்டி சுற்றிலும் உள்ள கிராம மக்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பயன் பெறுவர். மழைக் காலங்களில் 13 கி.மீ. தொலைவு சுற்றி வந்தால்தால் தான் அடுத்த ஊருக்குச் செல்லும் நிலை இருந்து வந்தது. இப்பாலத்தால் இனி சிரமம் இல்லாமல் உடனடியாக அடுத்த ஊருக்குச் செல்லலாம்.
 ஆற்றைக் கடந்து சென்றுதான் எஸ்.வி.நகரத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பயிலும் நிலை உள்ளது. மேலும், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைக்குச் செல்லுதல் உள்ளிட்டவர்கள் சிரமமின்றி செல்லலாம் என்றார்.
 திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், வசந்தா கட்டுமான நிறுவன நிர்வாகி, ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com