ஷியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் கடைபிடிப்பு
By DIN | Published On : 24th June 2019 07:44 AM | Last Updated : 24th June 2019 07:44 AM | அ+அ அ- |

போளூரில் பாஜக மூத்த தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
ஜூன் 23-ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்த சேர்ந்த மூத்தத் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளாகும். இதையொட்டி, போளூர் பேருந்து நிலையம் அருகே ஷியாம் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்தை வைத்து பாஜகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
நகரத் தலைவர் என்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தகர் அணி பொதுச்செயலர் ஆர். கோபிநாத், மாவட்ட பொதுச்செயலர் வெங்கடேசன், நகர பொதுச்செயலர் குலசேகரன், நகரச் செயலர்கள் ராஜா, பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.