சுடச்சுட

  

  செங்கம் அருகே வறட்சியான கிராமங்களில் பொதுமக்களின் தாகம் தீர்த்து வரும் தொண்டு நிறுவனத்துக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
   செங்கத்தை அடுத்த முறையாறு மற்றும் அரட்டவாடி கிராமத்தில் "வாம்' தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முறையாறு பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களை வைத்து பராமரிப்பது இதன் முக்கிய பணியாகும். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற குழந்தைகள் இந்த தொண்டு நிறுனத்தில் தங்கிபடித்து வருகின்றனர்.
   இதுதவிர, கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்துக்கு இலவச தையல் பயிற்சி, மகளிர் குழுக்கள் அமைத்து சுழல் நிதிக் கடனுதவி போன்ற பல்வேறு பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. தற்போது கோடை வெயில், மழையின்மை காரணத்தால் அரட்டவாடி, பிஞ்சூர், பொரசப்பட்டு பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஒரு கி.மீ. தொலைவு சென்று விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாம் தொண்டு நிறுவனம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட கிராமங்களை கண்டறிந்து, விவசாயக் கிணறுகள் மற்றும் தொண்டு நிறுவன வளாகத்தில் உள்ள கிணறுகளில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத்து வந்து, மக்களுக்கு காலை, மாலை என இருவேளையும் இலவசமாக விநியோகித்து வருகின்றனர். தொலை தூரம் சென்று தண்ணீர் எடுத்த அப்பகுதி மக்கள் வீடுதேடி தண்ணீர் வழங்கும் நிறுவனத்துக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai