சுடச்சுட

  

  தண்டராம்பட்டில் ஜூன் 29-ஆம் தேதி நடைபெறும் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்ப்பு முகாமில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்தது.
   இதுகுறித்து திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த. உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   தமிழ்நாடு கட்டுமான, உடலுழைப்பு மற்றும் இதர நல வாரியங்களில் தொழிலாளர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையிலான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 29) தண்டராம்பட்டில் நடைபெறுகிறது.
   தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமுக்கு வருவோர் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயதுச் சான்று, கல்விச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் வர வேண்டும். புதுப்பித்தல் மனு மற்றும் கேட்பு மனுக்களும் முகாமில் ஏற்றுக்கொள்ளப்படும்.
   அன்றைய தினம் ஏற்கெனவே பதிவு செய்த தொழிலாளர்களின் ஆதார் கார்டு விவரங்களையும் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai