சுடச்சுட

    

    வேட்டவலத்தில் போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
     வேட்டவலம், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி மனைவி ஜெயந்தி (39). செவிலியர் பட்டயப் படிப்பு முடித்துள்ள இவர், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக நலப் பணிகள் இணை இயக்குநர் பாண்டியனுக்கு தகவல் கிடைத்ததாம்.
     இதையடுத்து, மருத்துவத் துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை ஜெயந்தி வீட்டில் திடீர் ஆய்வில் ஈடுபட்டது. அப்போது, அலோபதி மருத்துவம் பார்ப்பதற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான உபகரணங்கள் இருந்ததாம்.
     இதையடுத்து, நலப்பணிகள் இணை இயக்குநர் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து போலி மருத்துவர் ஜெயந்தியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai