சுடச்சுட

    

    வந்தவாசி அருகே பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், பிச்சாண்டி ஆகியோர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு மும்முனி புறவழிச் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனையிட்டனர்.
     இதில், 3 பேரும் மதுப் புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம்(30), அரிகிருஷ்ணன்(28), கன்னியப்பன்(29) ஆகியோர் என்பதும், இவர்கள் அந்தக் கிராமத்தில் மது விற்பதற்காக வந்தவாசியை அடுத்த பொன்னூரில் உள்ள மதுக் கடையிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கிச் செல்வதும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 148 மதுப் புட்டிகள் மற்றும் பைக்யை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai