சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
     கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷிம் (32). இவரது மனைவி அஷரப்ஜான் (31). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அண்மைக் காலமாக ஆஷிம், அவரது தந்தை பாபு (எ) பந்தாபாபு (55), தாய் பேகம் (51), உறவினர் ஆஷா (54) ஆகியோர் சேர்ந்து அஷரப்ஜானை கொடுமைப்படுத்தி வந்தனராம். சில தினங்களுக்கு முன்பு 4 பேரும் சேர்ந்து அஷரப் ஜானிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஆஷிமை கைது செய்தனர். தலைமறைவான பாபு, பேகம், ஆஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai