சுடச்சுட

  

  குடிநீர்ப் பிரச்னை உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளிலும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7-அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai