சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By திருவண்ணாமலை/ செய்யாறு, | Published On : 04th March 2019 09:27 AM | Last Updated : 04th March 2019 09:27 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மற்ற ஊர்களில்...: இதேபோல, செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் மற்றும் கலசப்பாக்கம், தானிப்பாடி, வேட்டவலம், ஆவூர், கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, போளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.
இவற்றில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.