சுடச்சுட

    

    ஏப்ரல் 4-ஆம் தேதி வரை கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள்

    By DIN  |   Published on : 16th March 2019 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் 16-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்க, ஆண்டுக்கு 2 முறை இலவசமாக கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை 16-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடிந்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கால்நடைகள் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்க தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai