சுடச்சுட

  

  தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 16th March 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் படை வீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. 
  இந்தத் தேர்தலில் சிறப்புக் காவலர்களாகப் பணிபுரிவது முன்னாள் படை வீரர்களின் தலையாயக் கடமை.
  இந்தப் பணிக்கு திடகாத்திரமுள்ள முன்னாள் படை வீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
  வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் நேரில் வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai