சுடச்சுட

  

  நியூஸி. மசூதியில் தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

  By DIN  |   Published on : 16th March 2019 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியூஸிலாந்து நாட்டில் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  நியூஸிலாந்து நாட்டில் மசூதியில் தொழுகையின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
  பொள்ளாச்சி சம்பவத்தில் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்கீரன் கோபால் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை காவல் துறையினர் வெளியிட்டதைக் கண்டிக்கிறோம். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்.
  தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுகவுடன் தோழமையாகச் செயல்பட்டு, மக்கள் நலனுக்காகப் போராடி வந்துள்ளோம். இருந்தபோதும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமகவுக்கு வாய்ப்பளிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
  இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது. ஆகவே, கட்சியின் நலனைவிட தேசத்தின் நலனையும், தமிழக நலனையும் கருதி, மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியை மமக ஆதரித்து இணைந்து தேர்தல் பணியாற்றும் என்றார் அவர்.
  உடன், மாவட்டத் தலைவர் பு.ஜமால், மாவட்டச் செயலர் நசிர்அகமது, நகரத் தலைவர் அ.முபாரக், நகரச் செயலர் ஜீலான், நகரப் பொருளாளர் இஎஸ்பி.ஆசிப் உள்ளிட்டோர் இருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai