தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், புதுப்பாளையம், செங்கம், தண்டராம்பட்டு ஒன்றியங்களுக்கு உள்பட்ட 40 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
கட்டற்ற மென்பொருள் பயிற்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.சர்வேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பெ.பத்மநாபன் வரவேற்றார்.
கீழ்பென்னாத்தூரில்   உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினார். டி.லட்சுமிகாந்தன், பி.ஜெயபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு கட்டற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும்போது, மிகச்சிறப்பான முறையில் மாணவர்கள் மனம் கவரும்படியும், புரிதல் தன்மையை மேலோங்கச் செய்யவும் இந்தப் பயிற்சி உதவும் என பயிற்சியாளர்கள் கூறினர்.
இதில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் பு.கமலி, பெ.பத்மநாபன், விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மேலாளர் எஸ்.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com