சுடச்சுட

  

  அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் காவல் துறையினர் ஆலோசனை

  By DIN  |   Published on : 17th March 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்டவலம் காவல் நிலையம் சார்பில், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  வேட்டவலம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வேட்டவலம் காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் மதன்குமார், ஜெயவேலு, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆய்வாளர் கருணாநிதி வரவேற்றார்.
  கூட்டத்தில், காவல் ஆய்வாளர் நாகராஜ் பேசியதாவது: அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பொதுக்கூட்டங்கள் நடந்த 3 நாள்களுக்கு முன்பே தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். வாகனப் பிரசாரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும்.
  பிரசாரத்துக்கு வரும் கட்சி முக்கியப் பிரமுகர்கள் வருகையை சம்பந்தப்பட்ட கட்சியினர் காவல் நிலையத்தில் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், அதிமுக நகரச் செயலர் செல்வமணி, திமுக நகரச் செயலர் முருகையன், அமமுக நகரச் செயலர் செந்தில்குமரன், காங்கிரஸ் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai