சுடச்சுட

  

  கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவினத் தொகை நிர்ணயம்

  By DIN  |   Published on : 17th March 2019 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவினத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவினத் தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். 
  மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கூட்டத்தில், அரசு அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒலி பெருக்கி, மைக், மேடை, பந்தல், விளம்பரப் பதாகை, கொடி, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி, சுவர் விளம்பரம், விளம்பர வளைவுகள், வாகனங்கள், தங்கும் அறைகள், இருக்கைகள், மின் அலங்காரம், ஜெனரேட்டர், விளக்குகள், டீ-சர்ட், மேளம், உணவு வகைகள் ஆகியவை குறித்த செலவினத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
  கற்பூரம் ஏற்றி உறுதிமொழி: இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம், ஜனநாயகக் கடமை நிறைவேற்றுவது குறித்து பெண்கள் கற்பூரம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai