சுடச்சுட

  


  திருவண்ணாமலை கரன் கலை, அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  கல்லூரி நிர்வாகம், திருவண்ணாமலை வாசவி கிளப், ஸ்ரீராகவேந்திரா பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் பரிசோதனை, சிகிச்சை முகாமை நடத்தின. முகாமுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார். கல்லூரி ஆலோசகர் மு.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
  இந்திய பல் மருத்துவ சங்கத்தின் திருவண்ணாமலை கிளைத் தலைவர் எம்.சந்தானப்பிரியா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல் பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறினார். தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்து, இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
  இதில், ஸ்ரீவாசவி கிளப் தலைவர் ரங்கநாதன், திட்டத் தலைவர் தினேஷ், மண்டலத் தலைவர் ஜெயபால், கல்லூரி முதல்வர் ப.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  இதையடுத்து, கரன் கலை, அறிவியல் கல்லூரியின் இணையதளத்தை கல்லூரி இயக்குநர் பொன்.முத்து தொடக்கிவைத்தார். மேலும், கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  முகாமில், கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, கல்லூரி ஆலோசகர் மு.ரவிச்சந்திரன், முதல்வர் ப.துரைசாமி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை
   நட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai