மாற்றுப் பாதையில் இயக்கம்: அரசுப் பேருந்தை சிறைபிடித்துபொதுமக்கள் போராட்டம்

தண்டராம்பட்டை அடுத்த கரிப்பூர் கிராமம் வழியாக மதிய வேளையில் பேருந்து இயக்கக் கோரி, அந்த வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தண்டராம்பட்டை அடுத்த கரிப்பூர் கிராமம் வழியாக மதிய வேளையில் பேருந்து இயக்கக் கோரி, அந்த வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 3 முறை கீழ்வணக்கம்பாடி, கொழுந்தம்பட்டு, கரிப்பூர் கிராமங்கள் வழியாக சாத்தனூர் அணைக்கு நகர்ப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக இந்தப் பேருந்து மதிய வேளையில் இயக்கப்படாமல் மாற்றுப் பாதையில் செல்கிறதாம். இதனால், அந்தக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு தண்டராம்பட்டை அடுத்த மேல்கரிப்பூர் கிராமத்துக்கு நகர்ப் பேருந்து வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சாத்தனூர் அணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தன், தண்டராம்பட்டு வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேசிய போலீஸார், திங்கள்கிழமை (மார்ச் 18) முதல் மதிய வேளையில் கீழ்வணக்கம்பாடி, கொழுந்தம்பட்டு, கரிப்பூர் கிராமங்கள் வழியாக சாத்தனூர் அணைக்கு நகரப் பேருந்து இயக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். 
இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com