மக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்

திருவண்ணாமலை (அதிமுக)
பெயர்    :    அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
பிறந்த தேதி    :     22.3.1961
பெற்றோர்    :    சுந்தரேசன் - 
        ஜகதாம்பாள்
மனைவி    :     விஜயகுமாரி
பிள்ளைகள்    :    அருள்நேசன், 
        அரவிந்தன், ஸ்ரீதர்.
சொந்த ஊர்    :    எலத்தூர் கிராமம், 
        கலசப்பாக்கம்,
 கல்வி    :    பி.எஸ்சி. (அக்ரி), 
        பி.எல்.,
கட்சிப் பதவி    :    அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலர்.
அரசியல் அனுபவம்    :    1988-இல் அரசுப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கலசப்பாக்கம் தொகுதியில் திமுகவை எதிர்த்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி.
1996-இல் போளூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.
1998-இல் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. 
2006-இல் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ.
2011-இல் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உணவுத் துறை அமைச்சர், வணிகவரித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இளைஞர் நலன் அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

ஆரணி (அதிமுக)
பெயர்    :    செஞ்சி வெ.ஏழுமலை (64)
பிறந்த தேதி    :     3-05-1955
பெற்றோர்    :    வெள்ளைக் கவுண்டர் 
        - முனியம்மாள்
மனைவி    :    ராஜாராணி 
        (மேல்மலையனூர்
        முன்னாள் ஒன்றியக்
        குழுத் தலைவர்)
பிள்ளைகள்    :    டாக்டர் நந்தினி, 
        யோகேஷ்வரன்,
சொந்த ஊர்    :    அன்னமங்கலம், 
        மேல்மலையனூர் ஒன்றியம், 
        விழுப்புரம் மாவட்டம்.
 கல்வி    :    பி.காம்., பி.எல்.
தொழில்    :    விவசாயம்.
கட்சிப் பதவி    :    விழுப்புரம் வடக்கு மாவட்ட
                                              எம்ஜிஆர் மன்றச் செயலர்.
அரசியல் அனுபவம்    :    1989-ஆம் ஆண்டு 
அதிமுக சார்பில் சேவல் சின்னத்தில்போட்டியிட்டு தோல்வி.
2001 - 2006 வரை செஞ்சி தொகுதி சட்டப் பேரவை 
உறுப்பினர்.
2014 - 2019 வரை ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com