Enable Javscript for better performance
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 206 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
     கல்லூரியின் பணியமர்த்தும் அமைப்பு, புதுச்சேரி பராஸ் நிறுவனம் இணைந்து திங்கள்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
     கல்லூரியின் இளநிலை மூன்றாம் ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார்.
     கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எம்.கோபு வரவேற்றார். சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த 9 முன்னணி தனியார் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகள் 206 பேரை தேர்வு செய்தனர்.
     நிகழ்ச்சியில், கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் கு.ஜெயப்பிரகாஷ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai