Enable Javscript for better performance
குண்டும், குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே பெரியகல்தாம்பாடி, அரியாகுஞ்சூர் கிராமங்களுக்கு இடையிலான பழுதடைந்த சாலையால் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
     செங்கத்தை அடுத்த பெரியகல்தாம்பாடி முதல் அரியாகுஞ்சூர் வரையிலான தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக, பெரியகல்தாம்பாடி, அரியாகுஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இந்தச் சாலையில் செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்து நின்றுவிடுகின்றன. எனவே, பெரியகல்தாம்பாடி - அரியாகுஞ்சூர் இடையிலான சாலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai