Enable Javscript for better performance
சாலை விபத்தில் போர்வெல் உரிமையாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த கரைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போர்வெல் உரிமையாளர் உயிரிழந்தார்.
     போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி இருளர் காலனியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் பச்சையப்பன் (37). இவர், 2 போர்வெல் லாரிகளை வைத்து விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார்.
     பச்சையப்பன் போளூரை அடுத்த மண்டகொளத்தூர் அருகே ஆழ்துளை கிணறு அமைத்துவிட்டு திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். போளூரை அடுத்த கரைப்பூண்டி தனியார் சர்க்கரை ஆலை எதிரே சேத்துப்பட்டு - போளூர் சாலையில் வந்தபோது, பச்சையப்பனின் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     விபத்து குறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai